கொரோனா பாதிப்பால் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் பெண் தற்கொலை

கொரோனா பாதிப்பு காரணமாக கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தனிமையில் தவித்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

திரு.வி.க. நகர்:

சென்னை அயனாவரம் சோமசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் கல்பனா (வயது 36). இவருடைய கணவர் ராஜ்குமார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை இருந்தது. சில வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் அந்த குழந்தை இறந்து விட்டது. அதன்பிறகு கணவன்-மனைவி மட்டும் தனியாக வசித்து வந்தனர். 

இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ராஜ்குமார், கடந்த 3 நாட்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தனிமையில் பரிதவித்த கல்பனா, கணவர் இறந்த துக்கம் தாங்காமல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

நேற்று அதிகாலை தனது வீட்டில் கல்பனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com