குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நாகர்கோவில் புத்தேரியை சேர்ந்த 80 வயதுடைய மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் இறந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் தினமும் சுமார் 10 பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சுமார் 90 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நாகர்கோவில் புத்தேரியை சேர்ந்த 80 வயதுடைய மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் இறந்தார். 

இவர் ஏற்கனவே பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனாவும் தாக்கியதால் உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து மூதாட்டியின் உறவினர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com