விழுப்புரத்தில் கொரோனா தொற்றுக்கு தி.மு.க. பிரமுகர் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவிவருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள தென்னமாதேவி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 70). இவர் விழுப்புரம் மாவட்ட தி.மு.க. பிரதிநிதியாக இருந்தார்.

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதித்தார். அப்போது ஆறுமுகத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அங்கேயே சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவிவருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஏற்கனவே விழுப்புரம் நாராயணன்நகர் நேதாஜி தெருவை சேர்ந்த எலக்ட்ரீசியன் ராஜேந்திரன், விழுப்புரம் ராம்பாக்கத்தை சேர்ந்த தபால் ஊழியர் சுப்பிரமணி, பாணாம்பட்டு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஆகியோர் ஏற்கனவே கொரோனா 2-வது அலைக்கு பலியாகி உள்ளனர்.

தற்போது தி.மு.க. பிரமுகர் இறந்திருப்பது விழுப்புரம் மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com