திருவாரூரில் இன்று 47 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,014ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
Published on

திருவாரூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவாரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,014ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 11,550 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 115 பேர் உயிரிழந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com