சேலம் மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனா தொற்று

சேலம் மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு முதியவர் பலியானார்.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தினமும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 93 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 76 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 40 பேருக்கும், நங்கவள்ளி, ஓமலூர், எடப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 4 பேருக்கும், மேட்டூர், சேலம் ஒன்றியம், வீரபாண்டி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 3 பேருக்கும், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேருக்கும், கொளத்தூர், மகுடஞ்சாவடி, மேச்சேரி, தாரமங்கலம், தலைவாசல், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 648 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 87 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனிடையே சேலத்தை சேர்ந்த 75 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தனியார் ஆஸ்பத்திரியில் பலியானார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com