தஞ்சை, நாகையில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

தஞ்சை, நாகையில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானார்கள். டெல்டாவில் ஒரே நாளில் 513 பேருக்கு தொற்று உறுதியானது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 228 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 21 ஆயிரத்து 22 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் உயிரிழந்தார். இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 283 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 956 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 219 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 153 ஆக உயர்ந்துள்ளது. 121 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 9 ஆயிரத்து 725 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 82 வயது முதியவர், 52 வயது ஆண் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,270 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 119 பேருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 601 ஆக உயர்ந்துள்ளது. 92 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 12 ஆயிரத்து 607 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 877 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 513 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com