நாமக்கல் மாவட்டத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 17 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் தேவராயபுரம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

நாமக்கல்:

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 11,189 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் வெளிமாவட்டத்தை சேர்ந்த 3 பேரின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,186 ஆக குறைந்தது. இதற்கிடையே நேற்று ஒரே நாளில் தேவராயபுரம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 11,203 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று மாவட்டத்தில் 18 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 10,917 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 109 பேர் பலியான நிலையில், 177 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com