

தேனி:
தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 9 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் இதுவரை இந்த கொடிய வைரசால் 16 ஆயிரத்து 880 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 16 ஆயிரத்து 599 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.