காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னர் லாரி மோதி தொழிலாளி பலி

காவேரிப்பாக்கம் அருகே சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது கன்டெய்னர் லாரி மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே எசையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 35), கூலி தொழிலாளி. இதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (30) இவர்கள் 2 பேரும் நேற்று காவேரிப்பாக்கம் அருகே ராமநாதபுரம் சந்திப்பு பகுதியில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி அவர்கள் மீது மோதியது. இதில் சக்கரத்தில் சிக்கி வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த ராஜ்குமாரை சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இச்சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com