வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் செய்த காட்சி.
காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் செய்த காட்சி.
Published on

தஞ்சாவூர்:

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நிலையில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. 

போராட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபு மண்கொண்டார், சோழ மண்டல சிவாஜி பேரவை தலைவர் சதா வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com