முதல்வர் பழனிசாமி நாளை திருப்பத்தூர் வருகை: பிரசார கூட்டம் நடைபெறும் இடத்தை கே.சி.வீரமணி பார்வையிட்டார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் கே.சி.வீரமணி பார்வையிட்டார்.
பிரசார கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் கே.சி.வீரமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பிரசார கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் கே.சி.வீரமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Published on

திருப்பத்தூர்:

முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நாளை (புதன்கிழமை) திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். ஆம்பூரில் நடைபெறும் மகளிர்குழு ஆலோசனை கூட்டத்திலும், பின்னர் வாணியம்பாடியில் நடக்கும் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். தொடர்ந்து திருப்பத்தூர்- வாணியம்பாடி மெயின் ரோட்டில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் வேனில் இருந்தபடியே பேசுகிறார்.

திருப்பத்தூரில் பிரசார கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் கே.சி.வீரமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு அமைக்கப்படும் மேடை மற்றும் ஏற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது நகர செயலாளர் டி‌.டி.குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், மாவட்ட பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.நாகேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் டாக்டர் லீலா சுப்ரமணியம், கூட்டுறவு சங்க தலைவர் கே. எம்.சுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் என். திருப்பதி, பி.கே.சிவாஜி, சி.எம்.மணிகண்டன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com