நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு

நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சென்னை:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

* நிவர் மற்றுபு புரெவி புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும்.

* பாதிக்கப்பட்ட அனைத்துநிலப்பரப்புக்கு உச்சவரம்பின்றி நிவாரணம் வழங்கப்படும்.

* நெற்பயிர் தவிர, அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் நிவாரணத்தொகையாக ஹெக்டேருக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும்.

* பல்லாண்டு கால பயிர்களுக்கு நிவரணமாக ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

* 3.10 லட்சம் ஹெக்டேர் பரப்பிளான வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு.

* மானாவாரி மற்றும் நீர்பாசன வ்சசிதி பெற்ற நெல் மற்றும் இதர பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும்.

* இந்த நிவாரணம் ஜனவரி 7-ம் தேதி முதல் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com