உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கோவை நீதிமன்றங்கள் மூடல்

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளதால் வக்கீல்கள் உள்பட யாரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் மறு உத்தரவு வரும் வரை நுழையக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கோவை:

கோவை முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.சக்திவேல் அனைத்து நீதிமன்ற நீதிப திகள் வழக்கறிஞர் சங்கத்துக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று 18-ந் தேதி முதல் நீதிமன்ற வளாகத்துக்குள் வக்கீல்களோ, வழக்காடிகளோ நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.அனுமதிக்கப்பட்ட நீதிமன்ற பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

18-ந் தேதி முதல் நடைபெற இருந்த வழக்குகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றது. நீதிமன்றங்கள் இயங்காததால் ஜாமீன் மனுக்கள், முன்ஜாமீன் மனுக்கள் விடுமுறை கால நீதிபதியால் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

தவிர்க்க முடியாத அவசர சிவில் வழக்குகளை மின்னஞ்சல் முகவரியில் செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 1 மணிக்கு முன்பாக அனுப்பிவைக்கலாம்.

நீதிமன்ற வளாகத்துக்குள் இயங்கும் வங்கி, தபால் அலுவலகத்துக்கு செல்வோரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.அங்குள்ள ஏ.டி.எம் எந்திரத்தை பயன்படுத்த அனுமதி இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com