ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு சிலி நாடு ஒப்புதல்

உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக செயல் திறன் கொண்டது எனக் கூறப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது 69- நாடுகளில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

மாஸ்கோ:

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி கருதப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் வியாபித்துள்ள வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த்த தடுப்பூசியே முக்கிய கருவி என  நிபுணர்கள் வலியுறுத்துகின்றன. இதனால், உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணியில் முழு கவனம் செலுத்தி, தடுப்பூசி போட்டு வருகின்றன.  

இந்த நிலையில், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில்  ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக செயல் திறன் கொண்டது எனக் கூறப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது 69- நாடுகளில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  

சிலியில் கடந்த 24 மணி நேரத்தில் 996- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com