கடலில் மூழ்கி அண்ணன்-தம்பி உயிரிழப்பு

இறந்த தாயாருக்கு சடங்கு செய்ய வந்தபோது உவரி கடலில் மூழ்கி அண்ணன்-தம்பி பரிதாபமாக இறந்தனர்.
கடலில் மூழ்கி பலியான அக்னஸ் ராய், பிரவீன் ராய்.
கடலில் மூழ்கி பலியான அக்னஸ் ராய், பிரவீன் ராய்.
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் துரை குடியிருப்பு கீழுர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் அருள். இவரது மனைவி ரெனிஷ். இவர்களுக்கு அக்னஸ் ராய் (வயது 18), பிரவீன் ராய் (16) ஆகிய மகன்கள் உண்டு. அக்னஸ் ராய் என்ஜினீயரிங் கல்லூரியிலும், பிரவீன் ராய் பாலிடெக்னிக் கல்லூரியிலும் படித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி உடல் நலக்குறைவால் ரெனிஷ் இறந்து விட்டார். இதையடுத்து அவருக்கு சடங்கு செய்வதற்காக ஜான்சன் அருள் தனது மகன்கள், உறவினர்களுடன் உவரி அந்தோணியார் ஆலயத்திற்கு வந்தனர்.

அங்கு நேற்று அக்னஸ் ராய், பிரவீன் ராய் ஆகியோர் மொட்டை அடித்து விட்டு கடலில் குளிக்க சென்றனர். குளித்துக் கொண்டு இருக்கும்போது அவர்கள் தடை செய்யப்பட்ட ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, திடீரென்று கடலில் எழுந்த ராட்சத அலையில் அவர்கள் சிக்கினர். இதில் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறிய அக்னஸ் ராய், பிரவீன் ராய் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com