ராணுவ தளபதி நரவானே அடுத்த வாரம் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா பயணம்

இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவானே ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுக்கு அடுத்த வாரம் பயணம் செல்கிறார்.
ராணுவ தளபதி எம்.எம்.நரவானே
ராணுவ தளபதி எம்.எம்.நரவானே
Published on

புதுடெல்லி:

இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே அடுத்த வாரம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுக்கு 4 நாள் பயணம் செல்கிறார்.

அப்போது அவர் இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கடந்த மாதம் நேபாளம் நாட்டுக்கு சென்ற ராணுவ தளபதி நரவானே, அந்நாட்டு ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி மற்றும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ஆகியோரை சந்தித்தார். ராணுவ தளபதி நரவானேவுக்கு ‘நேபாள ராணுவ தளபதி’ என்ற கவுரவ பதவியை ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி வழங்கினார்.

மேலும், அந்நாட்டு ராணுவ மருத்துவமனைக்கு தேவையான எக்ஸ் ரே மெஷின் உள்ளிட்ட பல்வேறு மருந்து பொருள்களை ராணுவ தளபதி நரவானே வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com