ஹைதராபாத்திலிருந்து காரில் சேலம் கொண்டு சென்ற ரூ.2 ½ கோடி தங்கம், வைர நகைகள் பறிமுதல்

ஹைதராபாத்திலிருந்து காரில் சேலம் கொண்டு சென்ற ரூ.2 ½ கோடி தங்கம், வைர நகைகளை ஆந்திர தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on: 

திருப்பதி:

ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29-ந்தேதி தொடங்கியது.

இதையொட்டி மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் போலீசார் சோதனை சாவடிகளை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்னூல் அருகே உள்ள சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சேலத்திற்கு சென்ற கார் ஒன்றை போலீசார் உதவியுடன் தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில் காரில் ரூ.2½ கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காரில் இருந்த தெலுங்கானாவை சேர்ந்த விஜயசர்மா, சுரேஷ், முனுசாமி ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். உரிய ஆவணங்கள் இன்றி ஆபரணங்களை சேலத்திற்கு விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து காருடன் தங்க ஆபரணங்கள் மற்றும் வைர கற்களை பறிமுதல் செய்த போலீசார், விஜயசர்மா மற்றும் சுரேஷ், முனுசாமி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com