அமைச்சர் செல்லூர் ராஜூ
செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ பெயரில் போலி அறிக்கை- போலீஸ் கமிஷனரிடம் அதிமுக புகார்
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கையொப்பம் போல் போலி மார்பிங் செய்து தவறான அறிக்கை சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
மதுரை:
மதுரை செய்தித் தொடர்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அண்ணாத்துரை, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கையொப்பம் போல் போலி மார்பிங் செய்து தவறான அறிக்கை சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இது எதிர்க்கட்சியினர் தூண்டுதலின்பேரில் நடந்து வருகிறது. இதற்கும், செல்லூர் ராஜூவுக்கும் துளி கூட தொடர்பு இல்லை. தோல்வி பயத்தில் உள்ள தி.மு.க.வினர் சதித்திட்டம் தீட்டி பொய்யான அறிக்கையை தயாரித்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.
எனவே இந்த பொய்யான அறிக்கையை பரப்பிய தி.மு.க.வினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.