மராட்டிய மந்திரி ஆதித்ய தாக்கரேவுக்கு கொரோனா தொற்று

மராட்டிய மந்திரி ஆதித்ய தாக்கரேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆதித்ய தாக்கரே
ஆதித்ய தாக்கரே
Published on

மும்பை:

மராட்டியத்தில் கொரோனாவின் 2-வது அலை பரவி வருகிறது. இதனால், கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மராட்டியத்தில் நாக்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பரவலாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இந்த சூழலில், மராட்டியத்தில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவின் மகனும் மாநில சுற்றுச்சூழல் துறை மந்திரியுமான ஆதித்ய தாக்கரேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com