முகவரி கேட்பது போல பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

பொன்னேரி அருகே முகவரி கேட்பது போல பெண்ணிடம் 8 பவுன் நகையை 2 பேர் பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த சோழவரம் அருகே ஆங்காடு கிராமம் உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் அந்த பகுதியை சேர்ந்த சீனிவாசன் (48) என்பவரது மனைவி ஜீவா (45) நின்று கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் முகவரி கேட்பது போல் ஜீவா அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர். 

இதுகுறித்து சோழவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com