பரமத்தி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

பரமத்தி அருகே சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 70 வயது மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீக்குளிப்பு (கோப்புப்படம்)
தீக்குளிப்பு (கோப்புப்படம்)
Published on

ராசிபுரம் அருகே உள்ள பாலப்பாளையத்தைச் சேர்ந்தவர் அத்தியப்பன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 70). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவர் இறந்து விட்டதால் பழனியம்மாள் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் பழனியம்மாள் கடந்த 6 மாதங்களாக பரமத்தி அருகே இருக்கூரில் உள்ள அவரது அண்ணன் பெருமாளின் மகன் முருகேசன் வீட்டில் தங்கியிருந்தார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த பழனியம்மாள் நேற்று முன்தினம் திடீரென தனது உடையில் தீ வைத்துக் கொண்டு உயிருக்கு போராடியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com