அருணாச்சலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் 6 பேர் பாஜகவுக்கு தாவல்

அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் மொத்தம் உள்ள 7 எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் பாஜகவுக்கு தாவியுள்ளனர்.
பாஜக
பாஜக
Published on

இடாநகர்:

அருணாச்சல பிரதேச மாநில ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ரும்காங் சட்டசபைத் தொகுதியைச் சேர்ந்த தாலேம் தபோ, ஹயெங் மங்ஃபி (சயாங் தாஜோ தொகுதி), ஜிகே டகோ (தாலி), டோர்ஜி வாங்டி கர்மா (கலக்தாங்), டோங்ரு சியோங்ஜு (போம்டிலா), காங்காங் டாகு (மரியாங் கேகு)ஆகியோர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

முன்னதாக, கடந்த நவம்பர் 26 அன்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதோடு அவர்களை இடைநீக்கம் செய்தது.

அருணாச்சல மக்கள் கட்சியின் லிகாபாலி தொகுதி எம்.எல்.ஏ. ஒருவரும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

இதுதொடர்பாக, அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. தபிர் காவோ கூறுகையில், அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் பா.ஜ.க.வில் இணைந்தது இயல்பான ஒன்று. இது தாய் வீடு திரும்பியது போன்றது என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com