அசாதுதின் ஓவைசி இல்லம் மீது தாக்குதல் - 5 பேர் கைது

டெல்லியில் உள்ள ஓவைசி இல்லத்தை சேதப்படுத்தியதாக இந்து சேனா அமைப்பை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாதுதின் ஓவைசி
அசாதுதின் ஓவைசி
Published on

புதுடெல்லி:

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான  அசாதுதின் ஓவைசியின் அலுவலக இல்லம் டெல்லியில் உள்ள அசோகா சாலையில் உள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை ஓவைசியின் இல்லத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்து சேனா அமைப்பை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ள டெல்லி போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com