3-வது நாளாக உயிரிழப்பில்லை: புதிதாக 33 பேருக்கு கொரோனா

மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

மதுரை:

மதுரையில் நேற்று 33 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் 19 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 51 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 35 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் 71 ஆயிரத்து 314 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். 

சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 572 ஆக உள்ளது. மதுரையில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1140 ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com