தெலுங்கானா மாநிலத்தில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் 2,635 டன் அரிசி வந்தது

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயிலில் நெல்லைக்கு நேற்று 2,635 டன் அரிசி கொண்டு வரப்பட்டது.
நெல்லைக்கு ரெயிலில் அரிசி வந்தது
நெல்லைக்கு ரெயிலில் அரிசி வந்தது
Published on: 

நெல்லை:

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யும் வகையில், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரிசி மூட்டைகள் ரெயில்களில் கொண்டு வரப்படுகிறது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயிலில் நெல்லைக்கு நேற்று 2,635 டன் அரிசி கொண்டு வரப்பட்டது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்த சரக்கு ரெயிலில் இருந்து அரிசி மூட்டைகளை லாரிகளில் ஏற்றி, பாளையங்கோட்டை நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு கொண்டு சென்றனர்.

இதேபோன்று ஒடிசாவில் இருந்து சரக்கு ரெயிலில் 620 மெட்ரிக் டன் உர மூட்டைகளும் நெல்லைக்கு வந்தன.

X

Maalai Malar
www.maalaimalar.com