மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி செவிலியர் உள்பட 26 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி செவிலியர் உள்பட 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

நாமக்கல்:

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 11,048 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே ஒருவரின் பெயர் பிற மாவட்ட பட்டியலில் இருந்து நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்‌ எண்ணிக்கை 11,049 ஆக ஆனது.

இந்தநிலையில் நேற்று மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி செவிலியர் உள்பட 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,075 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 23 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 108 பேர் பலியான நிலையில், 10,781 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் 186 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com