பெரம்பலூரில் 2 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கு என மொத்தம் 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர், ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கு என மொத்தம் 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,250 ஆக உயர்ந்துள்ளது. அதில், ஏற்கனவே 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,224 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், 5 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 332 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே மாவட்டத்தில் 4,606 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஏற்கனவே 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு தற்போது 64 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 4,494 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 324 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com