

எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படியும், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுரைகளின்படியும், நிர்வாக அதிகாரி கணேசன் வழிகாட்டிதலின்படி எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆட்டுச்சந்தையில் முககவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்த 16 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் காவல் துறை, பேரூராட்சி பரப்புரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.