தஞ்சை, வேலூரில் 2 பேருக்கு வைரஸ் தொற்று- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி
Published on

சென்னை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசால் மிகப்பெரிய பாதிப்பை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிய நோய்த்தொற்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. 

எனினும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மதிய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தைப் பொருத்தவரை ஏற்கனவே 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 2 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆக உயர்ந்துள்ளது. 

கும்பகோணத்தைச் சேர்ந்த 42 வயது நபர், மேற்கிந்திய தீவுகளில் இருந்து வந்த பின்னர், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல் பிரிட்டனில் இருந்து வந்த காட்பாடியைச் சேர்ந்த 49 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com