மும்பையில் இருந்து கவர்னர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னை வருகிறார்

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பை நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு இன்று அவசரமாக சென்னை வருகிறார்.
மும்பையில் இருந்து கவர்னர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னை வருகிறார்
Published on

அ.தி.மு.க.வில் இரு அணிகளாக உள்ள எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இன்று இணைய உள்ளதால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரு அணிகளும் இணைந்த பிறகு அமைச்சரவையும் மாற்றம் செய்யப்படுகிறது. அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிகிறது. இது தவிர மாபா. பாண்டியராஜன், செம்மலை ஆகியோருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என தெரிகிறது.

அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கான கடிதத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி கவர்னரிடம் இன்று மாலை வழங்குவார் என தெரிகிறது. இதற்காக கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பை நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு இன்று அவசரமாக சென்னை வருகிறார்.

அ.தி.மு.க. இரு அணிகள் இணையும்போது டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நிலைப்பாடு என்ன என்பதும் அப்போது தெரியும். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கிறார்களா? இல்லையா? என்பதும் தெரிய வரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com