வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த தமிழக கவர்னர், முதல்வர், துணை முதல்வர் டெல்லி பயணம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழக கவர்னர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் டெல்லி செல்கின்றனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #BanwarilalPurohit #EdappadiPalanisamy #OPanneerselvam #MKStalin
வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த தமிழக கவர்னர், முதல்வர், துணை முதல்வர் டெல்லி பயணம்
Published on

சென்னை:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

இன்று காலை முதல் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதை

தொடர்ந்து சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.05 மணிக்கு அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.

இதற்கிடையே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம் மற்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் டெல்லி செல்கின்றனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #BanwarilalPurohit #EdappadiPalanisamy #OPanneerselvam #MKStalin

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com