தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால்  புரோஹித்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
Published on

தமிழக ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த வந்த போலீசார் மற்றும் தீயணைப்புப்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் நேற்று தனியார் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இன்று அதற்கான முடிவு வந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய்க்கான அறிகுறி ஏதும் இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com