தமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை, நாங்கள் சகோதரர்கள்: கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை என்று கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். #Karnataka #Mekedatu
தமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை, நாங்கள் சகோதரர்கள்: கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்
Published on

கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. நாங்கள் தமிழகத்துடன் சண்டை போட விரும்பவில்லை. நாங்கள் சகோதர மாநிலம்.

மேகதாது திட்டம் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே பயனளிப்பதாக இருக்கும். இரு மாநிலங்களும் பயன்படுத்த முடியாமல் வீணாக கடலில் கலக்கும் நீரை தடுக்கவே அணை கட்டுகிறோம். கர்நாடக மக்களுக்கு குடிநீர் தரவேண்டியது எங்கள் கடமை. எனவே அணை கட்டுவதில் உறுதியாக உள்ளோம்.

மொத்த கர்நாடக மக்களும் ஆதரவாக இருப்பார்கள். கர்நாடகாவில் 6 கிராம மக்கள் எதிர்ப்பு என்பதில் உண்மையில்லை. திட்டம் வகுத்த பின் தமிழக அரசு உணர்ந்து கொள்ளும். மேகதாது அணையால் 67 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும்’’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com