

சென்னை:
தமிழக அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத் துறை அமைச்சர் பதவியிலிருந்து எஸ்.பி.சண்முகநாதன் விடுவிக்கப்பட்டுள்ளார். சண்முகநாதன் வகித்து வந்த பால்வளத்துறை இலாகா கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே பாண்டியராஜன் புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையும் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த பென்ஜமின் ஊரக தொழில் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நாளை (செவ்வாய்க்கிழமை) ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது.