தமிழகம் - புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் - புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு
Published on

சென்னை:

சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெப்பம் நிலவும் நிலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து குளிர்வித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழை பெய்யும். அதிகபட்ச வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்ப நிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிக பட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 4. செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி, செங்குன்றம், சோழவரம், கே.வி.குப்பம் ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழையும், செங்கல்பட்டு, திருச்சுழி, தாமரைப்பாக்கம், காஞ்சீபுரம், கேளம்பாக்கம், திருவள்ளூரில் 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் மற்ற இடங்களில் 1 செ.மீ. அளவுக்கு மிதமான மழை பெய்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்துக்கு பிறகு 7-ந் தேதி காலை 8.30 மணி முதல் கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பிரதேசங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், இது 8-ந் தேதி காலை 8.30 மணி வரைக்குமான வானிலை நிலவரம் என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com