சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக தஹில் ரமணி இன்று பதவியேற்பு

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள தஹில் ரமணி இன்று பதவியேற்க உள்ளார். #Collegium #TahilRamani #IndiraBanerjee #ChennaiHighCourt
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக தஹில் ரமணி இன்று பதவியேற்பு
Published on

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தான் சுப்ரீம் கோர்ட்டுக்கான நீதிபதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து வருகிறது.

இதற்கிடையே, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜியை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. தனது பரிந்துரையை கொலிஜியம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. 

கொலிஜியம் பரிந்துரையை ஏற்று சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக தஹில் ரமணியை நியமித்து மத்திய அரசு ஒத்துழைத்தது.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள தஹில் ரமணி இன்று பதவியேற்க உள்ளார்.

கவர்னர் மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தஹில் ரமணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். #Collegium #Tahilramani #ChennaiHighCourt #IndiraBanerjee

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com