டி20-யில் அதிக ரன்கள்: சோயிப் மாலிக் சாதனையை சமன் செய்தார் முகமது ஹபீஸ்

டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த பேட்ஸ்மேன் தரவரிசையில் சோயிப் மாலிக் சாதனையை சமன் செய்துள்ளார் முகமது ஹபீஸ்.
முகமது ஹபீஸ்
முகமது ஹபீஸ்
Published on

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் முகமது ஹபீஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2-வது போட்டியில் ஆட்டமிழக்காமல 99 ரன்கள் விளாசி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

இன்று நடைபெற்ற 3-வது போட்டியில் 41 ரன்கள் அடித்தார். இதன்மூலம் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 2,323 ரன்கள் அடித்து சோயிப் மாலிக் ரன்களுடன் சமநிலையில் உள்ளார்.

இவர்கள் இருவரும்தான் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.

சோயிப் மாலிக் 105 இன்னிங்சில் அடித்த நிலையில், முகமது ஹபீஸ் 94 இன்னிங்சில் அடித்துள்ளார். முகமது ஹபீஸ் 14 அரைசதங்களும், சோயிப் மாலிக் 8 அரைசதங்களும் அடித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com