ரெயில்வே முன்பதிவு விண்ணப்பங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி குறியீடு

ரெயில்வே முன்பதிவு விண்ணப்பங்களில் ஆண், பெண் என்பதற்கு மாற்றாக T என்னும் தனி குறியீட்டை மூன்றாம் பாலினத்தவர்கள் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்படுகிறது.
ரெயில்வே முன்பதிவு விண்ணப்பங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி குறியீடு
Published on

புதுடெல்லி:

ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்களை மூன்றாம் பாலினத்தவர்களாக அங்கீகரித்து கடந்த 2014-ம் ஆண்டு இந்திய உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது.

இதை தொடர்ந்து, பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களில் 'TG' (third gender), 'Other' அல்லது 'T' என்ற மூன்றாம் பாலினத்தவர்களான அடையாளத்தை பதிவு செய்யும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரெயில்வே முன்பதிவு மற்றும் முன்பதிவு ரத்து செய்வதற்கன விண்ணப்பங்களில் ஆண், பெண் அல்லது 'TG' (third gender) என்பதற்கு மாற்றாக T என்னும் தனி குறியீட்டை மூன்றாம் பாலினத்தவர்கள் பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்த ரெயில்வே வாரியம் தீர்மானித்துள்ளது.

இந்த முடிவின் அடிப்படையில் இனி ரெயில்வே முன்பதிவு மற்றும் முன்பதிவு ரத்து செய்வதற்கான விண்ணப்பங்களில் ஆண், பெண் என்பதற்கு மாற்றாக வெறும் T என்னும் தனி குறியீடு இடம்பெற வேண்டும் என அனைத்து மண்டலங்களில் உள்ள தலைமை அலுவலகங்களுக்கு கடந்த 17-ம் தேதி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com