ரூ.3,999 விலையில் 4ஜி வோல்ட்இ வசதி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்தியாவில் 4ஜி வோல்ட்இ வசதி கொண்ட ஸ்மார்ட்போனினை ஸ்வைப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஸ்வைப் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரூ.3,999 விலையில் 4ஜி வோல்ட்இ வசதி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்
Published on

புதுடெல்லி:

ஸ்வைப் நிறுவனம் இந்தியாவில் எலைட் 4ஜி எனும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. வோல்ட்இ வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 8 எம்பி பிரைமி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்ட ஸ்வைப் எலைட் 4ஜி 2500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்தகை சிறப்பம்சங்களுடன் விலை குறைந்த ஸ்மார்ட்போனாக எலைட் 4ஜி இருக்கிறது.


ஸ்வைப் எலைட் 4ஜி சிறப்பம்சங்கள்:


- 5.0 இன்ச் 850x480 பிக்சல் FWVGA டிஸ்ப்ளே

- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்

- 1 ஜிபி ரேம் 

- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ

- டூயல் சிம் ஸ்லாட்

- 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

- 5 எம்பி செல்ஃபி கேமரா

- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ

- 4ஜி வோல்ட்இ, வைபை, 

- ப்ளூடூத் 4.0, ஜி.பி.எஸ்.

- 2500 எம்ஏஎச் பேட்டரி

இந்தியாவில் ஸ்வைப் எலைட் 4ஜி பிளாக், கோல்டு மற்றும் கிரே நிறங்களில் கிடைப்பதோடு ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஸ்வைப் எலைட் 4ஜி விலை ரூ.3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com