சுவீடன் மாடல் அழகிக்கு கற்பழிப்பு மிரட்டல்

சுவீடன் நாட்டை சேர்ந்த மாடல் அழகியின் காலனி விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல்களும் விடுக்கப்படுகிறது.
சுவீடன் மாடல் அழகிக்கு கற்பழிப்பு மிரட்டல்
Published on

லண்டன்:

சுவீடன் நாட்டை சேர்ந்த மாடல் அழகி அர்விதா பைஸ்ட்ராம் (26). சமீபத்தில் இவர் அடிடாஸ் காலனி விளம்பரத்துக்கு ‘போஸ்’ கொடுத்தார். அப்போது அவரது கால்கள் சவரம் (ஷேவ்) செய்யாமல் ரோமங்களுடன் இருந்தது.

இந்த கவர்ச்சி போட்டோ ‘அடிடாஸ்’ இணையதளத்தில் வெளியானதும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமானோர் மாடல் அழகி பைஸ்ட்ராமை ‘கன்னா’பின்னாவென திட்டித் தீர்த்தனர்.

ஒரு சிலரோ ஒருபடி மேலே போய் அவருக்கு கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல்களும் விடுத்தனர். இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவரை வறுத்தெடுத்தனர்.

நீ ஒரு ‘அசிங்கமான பெண்’, ‘அருவருப்பானவள்’ என்றும் வசைபாடியுள்ளனர். அவரது போட்டோவை பிரசுரித்து அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளனர். இந்த தகவலை மாடல் அழகியே தெரிவித்தார்.

அதே நேரத்தில் அடிடாஸ் நிறுவனம் இவரை பாராட்டியுள்ளது. அழகுணர்ச்சி மிகுந்த மென்மையான பெண் என வர்ணித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com