

ஆட்டத்தின் முதல்பாதி நேரத்தின் கடைசி நிமிடமான 45-வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணியின் எரிக் பெய்லி முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல்பாதி நேரத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என முன்னிலைப் பெற்றது.
கோல்அடித்த மார்சியலை பாராட்டும் போக்பா
2-வது பாதி நேர ஆட்டதில் சுமார் 35 நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. கடைசி 10 நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
மான்செஸ்டர் வீரர் லூக்காகு
அந்த அணியின் ரொமேலு லூக்காகு 80-வது நிமிடத்திலும், போக்பா 82-வது நமிடத்திலும், அந்தோணி மார்சியல் 84 நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனால் மான்செஸ்டர் அணி 4-0 என ஸ்வான்சீ அணியை வீழ்த்தியது.
கோல் அடித்த சந்தோஷத்தில் போக்பா