

புதுடெல்லி:
சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 2017 ஜிக்சர் SF மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) கொண்ட புதிய ஜிக்சர் கார்புரேட்டெட் மற்றும் ஃபியூயல் இன்ஜெக்ட் என இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றின் விலை முறையே ரூ.95,499 மற்றும் ரூ.99,312 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் ஜிக்சர் மாடலுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாவது அப்டேட் இது ஆகும். முன்னதாக ஏப்ரல் மாதத்தில் BS-IV தொழில்நுட்பம் கொண்ட ஜிக்சர் வெளியிடப்பட்டது. ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட புதிய ஜிக்சர் SF இந்தியாவின் அனைத்து விநியோகஸ்தர்களிடமும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுசுகி ஜிக்சர் மாடலில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் யுனிட் கொண்டுள்ளது. இதே போன்ற ஏபிஎஸ் யுனிட் பஜாஜ் பல்சர் RS 200 மாடலிலும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஏ.பி.எஸ். சிஸ்டம் கொண்ட விலை குறைந்த மாடலாக ஜிக்சர் SF இருக்கிறது. மேலும் 125சிசிக்கும் அதிகமான மாடல்களில் பாதுகாப்பு வசதிகளை வழங்கும் முதல் நிறுவனமாக சுசுகி இருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஏப்ரல் 2018 முதல் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
புதிய ஜிக்சர் SF மாடலில் 154.9 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 14.5 bhp, 8000 rpm மற்றும் 14 Nm பீக் டார்கியூ 6000 rpm செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. இதன் ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் மாடலில் இன்ஜினிற்கு எரிபொருள் அனுப்ப ஆறு சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறம் மோனோஷாக் மற்றும் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளது.