இம்ரான் தாஹிர்-ஐ ஒப்பந்தம் செய்தது கவுன்ட்டி கிரிக்கெட் அணி சர்ரே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி 26 விக்கெட்டுக்களுடன் பர்பிள் கேப்-ஐ வென்ற இம்ரான் தாஹிர் கவுன்ட்டி கிரிக்கெட் அணியான சர்ரே உடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
தற்போது இவரை இங்கிலாந்து கவுன்ட்டி கிளப் அணியான சர்ரே ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் இம்ரான் தாஹிர் டி20 பிளாஸ்ட்தொடரில் விளையாட இருக்கிறார். சர்ரே அணி ஏற்கனவே வெளிநாட்டு வீரர்களில் ஆரோன் பிஞ்ச்-ஐ ஒப்பந்தம் செய்துள்ளது.