கமலுக்கு நாளை அறுவை சிகிச்சை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு காலில் பொருத்தப்பட்டிருந்த கம்பியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை நாளை நடைபெற இருக்கிறது.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Published on

சென்னை:

மக்கள் நீதிமய்யம் கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2016-ம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக கமல்ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம் கம்பி ஒன்று பொருத்தப்பட்டது.

அரசியல் மற்றும் சினிமாவில் கமல்ஹாசனுக்கு இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையாமல் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.

மருத்துவர்களின் ஆலோசனைபடி கமல்ஹாசனுக்கு நாளை (22-ந்தேதி) அக்கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கின்றது.

சிகிச்சை மற்றும் அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் ஓய்விக்குப் பின் கமல்ஹாசன் பொதுமக்களையும், கட்சி தொண்டர்களையும் சந்திப்பார்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com