27 காண்டாக்ட் லென்சை கண்ணில் வைத்திருந்த பெண்: அறுவை சிகிச்சை மூலம் நீக்கம்

இங்கிலாந்தின் சோலிஹல் மருத்துவனையில் ஒரு பெண்ணின் கண்ணிலிருந்து 27 காண்டாக்ட் லென்ஸை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் நீக்கினர்.
27 காண்டாக்ட் லென்சை கண்ணில் வைத்திருந்த பெண்: அறுவை சிகிச்சை மூலம் நீக்கம்
Published on

லண்டன்:

இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்டில் பகுதியில் உள்ள சோலிஹல் மருத்துவமனையில் 67 வயதான பெண் ஒருவர் கண்புரை அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர் கண்ணில் 17 காண்டக்ட் லென்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருந்திருக்கிறது. இரண்டாவது தடவை சோதனை செய்த போது மேலும் 10 லென்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 27 லென்ஸ்கள் கண்ணில் இருந்துள்ளன.

இது பற்றி அப்பெண்ணிடம் கேட்டபோது, அவர் தனக்கு வெகு நாட்களாக கண்ணில் உறுத்தல் இருந்தாகவும் அது முதுமை காரணமாக ஏற்படுகிறது என எண்ணி அலட்சியமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர் 20 வருட அனுபவம் உள்ள கண் மருத்துவர் அவர் கண்ணில் உள்ள லென்ஸ்களை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தார். மருத்துவரிடம் ஆலோசனை செய்யாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்து லென்ஸ் பயன்படுத்துவதே இது போன்ற சம்பவத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com