கோவளம் கடற்கரையில் நீர்ச்சறுக்கு, யோகா, இசைத் திருவிழா: பொதுமக்கள் உற்சாகம்

சென்னை கோவளம் கடற்கரையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றுவந்த நீர்ச்சறுக்கு, யோகா திருவிழா இன்று இசைச்கச்சேரியுடன் நிறைவடைந்தது.
கோவளம் கடற்கரையில் நீர்ச்சறுக்கு, யோகா, இசைத் திருவிழா: பொதுமக்கள் உற்சாகம்
Published on

சென்னை மகாபலிபுரத்தை அடுத்த கோவளம் கடற்கரையில் கடந்த 25-ம் தேதி (நேற்றுமுன்தினம்) நீர்ச்சறுக்கு, யோகா உள்ளிட்ட நிகழ்வுகளை உள்ளடக்கிய நிகழ்ச்சி தொடங்கியது. மூன்று நாட்களும் விடுமுறை தினம் என்பதால் அதிகமான பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.

இந்தியாவின் மிகப்பெரிய நீர்ச்சறுக்கு போட்டியாக கருத்தப்படும் இந்நிகழ்வில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகளில் இருந்து நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 12, 16, 22, 30 மற்றும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடந்தன. இதேபோல பெண்களுக்கும் தனியாக போட்டிகள் நடைபெற்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com