ஹர்பஜன் சிங்கிற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நடித்துள்ள படம் நாளை ரிலீஸ் ஆகும் நிலையில், திரைப்படக் குழுவினற்கு சுரேஷ் ரெய்னா தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா
Published on

ஜே.பி.ஆர்.-  ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கியுள்ள படம் 'பிரண்ட்ஷிப்'. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.  இதில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடித்துள்ளார்.  இப்படத்தில் அர்ஜுன், சதீஷ், லாஸ்லியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'பிரண்ட்ஷிப்'  திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதல்முறையாக கதாநாயகனாக நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான பல எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரர் சுரேஷ் ரெய்னா ஹர்பஜன் சிங் மற்றும் படக்குழுவினருக்கு தமிழில் டுவீட் செய்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘பஜ்ஜி பா ஹர்பஜன் சிங் என் அண்ணாத்த! பிரண்ட்ஷிப் டிரைலர், டீஸர் எல்லாம் வலிமையா இருக்கு, படம் கண்டிப்பா பீஸ்டா இருக்கும். பிரண்ட்ஷிப் படகுழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களே நீங்க எல்லோரும் நாளைக்கு தியேட்டர்ல படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க’’ என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com