ஐபிஎல் கிரிக்கெட்: 10 ஓவர் முடிவில் ஐதராபாத் 61/2

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.
வார்னர் விக்கெட்டை வீழ்த்திய சக்ரவர்த்தி
வார்னர் விக்கெட்டை வீழ்த்திய சக்ரவர்த்தி
Published on

அபுதாபி:

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர்கொண்டுள்ளது.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பிரிஷ்டோ ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரன் எடுக்க முடியாமல் தடுமாறிய பிரிஷ்டோ 10 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய மனீஷ் பாண்டே கேப்டன் வார்னருடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால், 30 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்த ஐதராபத் கேப்டன் வார்னர் சக்ரவர்த்தி வீசிய பந்தில் அவரிடமே சுலபமான கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.

தற்போது ஐதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியின் மனீஷ் பாண்டே 19 ரன்களுடனும், விர்திமன் சஹா 1 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

ஐதராபாத் தரப்பில் பேட் கம்மின்ஸ் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com