100 விக்கெட் வீழ்த்திய முதல் வெளிநாட்டு சுழற்பந்து வீரர்- சுனில்நரேன் சாதனை

நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் 3 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 விக்கெட் கைப்பற்றிய முதல் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்துள்ளார்.#IPL #SunilNarine
100 விக்கெட் வீழ்த்திய முதல் வெளிநாட்டு சுழற்பந்து வீரர்- சுனில்நரேன் சாதனை
Published on

டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதன்மூலம் அவர் 100 விக்கெட்டை கடந்தார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட் கைப்பற்றிய முதல் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்தார். 86 ஆட்டத்தில் 102 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

இதுவரை சுனில்நரேன் 336 ஓவர் வீச 2113 ஓவர் ரன் விட்டு கொடுத்து உள்ளார். 6 முறை 4 விக்கெட்டும், ஒரு முறை 5 விக்கெட்டும் எடுத்துள்ளார். ஒரு ஓவரில் ரன் சராசரி 6.28 ஆகும்.

ஐபிஎல் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டியில் சுனில்நரேன் விளையாடிய போது அவரது பந்துவீச்சு சந்தேகமாக உள்ளது என்று புகார் எழுந்தது. ஆனால் அவருக்கு தடை விதிக்கப்படாமல் எச்சரிக்கை மட்டும் செய்யப்பட்டது.

இதற்கிடையே ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். #IPL

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com