செய்திகள்
சுமித்ரா மகாஜன் தேர்தலில் போட்டி இல்லை- இந்தூர் தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்க வேண்டுகோள்
மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறியுள்ளார். இந்தூர் தொகுதிக்கு வேறு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #SumitraMahajan
மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்(வயது 75), மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் இருந்து 8 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் அவர் இந்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், இதுபற்றி இன்று கருத்து தெரிவித்த சுமித்ரா மகாஜன், வரும் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்று கூறினார்.

